ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஜெயம் ரவி நடிக்கும் தில்லாலங்கடி படத்தின் நாயகியாக தமன்னா நடிக்கிறார். படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க நடிகை பானுவிடம் கால்ஷீட் கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டாராம். ஏன் இந்த முடிவு என்று பானுவிடம் கேட்டால், தில்லாலங்கடியில் கவர்ச்சியாக நடிக்கும்படி கேட்டனர். அதனால் மறுத்து விட்டேன். நான் படங்களில் கிளாமராக நடிப்பதை பார்த்து விட்டு என்னிடம் சிலர் தவறாக போனில் பேசுகிறார்கள். அங்கம் அங்கமாக வர்ணிக்கிறார்கள். எனவே இனி சினேகா மாதிரி குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்துள்ளேன் என்கிறார். குடும்ப குத்துவிளக்காக இருந்த சினேகா கவர்ச்சி நாயகியாக மாறிவிட்டார் என்பது பானுவுக்கு தெரியாது போலும்.