ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மெல்லிடையாள், இலியானாவை, தெலுங்கு ரசிகர்கள், "நம்பர் ஒன் இடத்தில் உட்கார வைத்து அழகு பார்க்கின்றனர். "நண்பன் படத்தில் நடித்த பின், தமிழ் ரசிகர்களின் இதயத்திலும் இடம் பிடித்து விட்டார். இப்போது, இந்தி ரசிகர்களும் இலியானாவை, கொண்டாட தயாராக உள்ளனர். "கிக் படம் வாயிலாக, இந்தி பட உலகத்திற்குள் நுழைந்து, அங்குள்ள ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த இலியானா, தற்போது, "பர்பியில் நடித்து முடித்துள்ளார். கால்ஷீட் கேட்டு, இயக்குனர் வந்த போது, ஆர்வமே இல்லாமல் தான், கதை கேட்டிருக்கிறார், இலியானா. பிறகு, அவர் கதையைச் சொன்ன விதம், இலியானாவை தூங்க விடவில்லையாம். "தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துவிட்டு, "கிக் படம் மூலம், இந்தி பட உலகத்தில் நுழைந்தேன். அதில், என் கிளாமரில் ரசிகர்கள் கிறங்கிப்போயினர். ஆனால், இப்போது நடிக்கும், "பர்பி என்னோட, நடிப்பாற்றலை முன்னிறுத்தும். இந்த கதையில் நடிக்க, ஆரம்பத்தில் ரொம்ப தயங்கினேன். இயக்குனர் கதை சொன்ன விதம், என்னை தூங்கவிட வில்லை. ஏனென்றால், கதை அப்படி. இந்த படத்துக்காக, ஆறு கிலோ எடை குறைந்துள்ளேன் என்கிறார் இலியானா.