நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' படத்தில் நடிகை தமன்னாவுடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:
'கண்ணே கலைமானே' படத்தில் ஆர்கானிக் விவசாயம் செய்யும் ஒரு விவசாயியாக நடித்திருக்கிறேன். விவசாயத்தை காப்பாற்றும் ஒரு கேரக்டர். படம் முழுக்க வேட்டி-சட்டையில்தான் நடித்திருக்கிறேன். தமன்னா, கூட்டுறவு சங்க அதிகாரி. அவருக்கும் ஆர்கானிக் விவசாயிக்கும் இடையே இழையோடு மெல்லிய காதல் தான் கதை. படத்தின் ஒரு காட்சியில் நான் கிளிசரின் இன்றி அழுதிருக்கிறேன். அதற்கு இயக்குநர் சீனு ராமசாமிதான் காரணம். கிளிசரின் இன்றி எப்படி அழுவது என்ற கலையையும் அவர் கற்றுள்ளார்.
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நடித்து, அப்படம் வெற்றி அடைந்த பின், எனக்கு காமெடி கேரக்டர்கள் மட்டும்தான் சரிபட்டு வரும் என நினைத்தேன். ஆனால், மனிதன் படத்தில் கேரக்டர் ரோலில் நான் நடித்து, அது வெற்றியடைந்த பின் தான், எனக்கும் எல்லா கேரக்டர்களிலும் நடிக்க முடியும் என முடிவெடுத்தேன்.
அரசியலைப் பொறுத்த வரை எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதற்காக, போஸ்டர் அரசியலில் தான் நான் வளர வேண்டும் என்பதில்லை. எனக்காக போஸ்டர் அடித்து ஒட்டுபவர்கள் யாரிடமும் நான் போஸ்டர் அடித்து ஒட்டுங்கள் என கூறியதில்லை. ஆர்வம் மற்றும் அன்பு மிகுதியால், எனக்காக பலரும் போஸ்டர் அடித்து ஒட்டுகின்றனர். ஒட்டிய போஸ்டர்களை என்னால் கிழித்தெறிய முடியாது.
இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.