அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் |
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் இணைந்து நடித்தப் படம் 'சீதக்காதி'. கடந்த 20ல் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் வயதான தோற்றமுடைய 'ஆதிமூலம் ஐயா' என்ற பெயருடைய கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி தத்ரூபமாக நடித்திருப்பதாக கருத்து பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், படம் மிக மிக நீளமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் சொல்லப்பட்டன.
இதையடுத்து, படத்தை ட்ரிம் பண்ணும் வேலையில், படத் தயாரிப்புக் குழு களம் இறங்கியது. படத்தின் நீளத்தை 15 நிமிடங்களுக்கு மேல் குறைத்து விட்டனர். இதையடுத்து, படம் விறுவிறுப்பாக செல்வதாக பலரும் கூறுகின்றனர்.