ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. அவர்கள் டேட்டிங்கில் இருப்பதாகவும் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் இருவரும் உறுதிப்படுத்தவில்லை. மேலும், விஜய் தேவரகொண்டாவின் படங்கள் அல்லது டிரைலர் குறித்து கருத்து தெரிவிக்கவும், பாராட்டவும் ராஷ்மிகா ஒருபோதும் தவறவிட்டதில்லை .
அந்த வகையில், விரைவில் திரைக்கு வரவிருக்கும் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான வீடியோவிற்கு ராஷ்மிகா ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை ஹாட் என்று அழைத்துள்ளார். அதோடு, ஜூலை 31ம் தேதி திரையரங்கில் வெளியாகும் போது இந்த படம் ஒரு பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா.
விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் நடித்த நிலையில் அடுத்து ராகுல் சாங்கிருத்யன் என்பவர் இயக்கும் புதிய படத்திலும் இணையப் போகிறார்கள்.