விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்திற்கு அவரது நெருங்கிய உறவினரான அனிருத் முதல் முறையாக இசையமைக்கும் படம் 'பேட்ட'. பொதுவாக ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் தங்களது பங்கு ஏதாவது இருந்தால் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் பெரிய பில்ட்அப் கொடுப்பார்கள். அதையெல்லாம் மிஞ்சம் வகையில் அனிருத் கொடுத்த பிலட்-அப் தான் சமூக வலைத்தளங்களில் நேற்றிலிருந்து காரசாரமான விவாதமாக இருந்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கே உரிய குத்துப் பாடலாக அமைந்த 'மரண மாஸ்' என்ற பேட்ட படத்தின் சிங்கிள் பாடலை நேற்று வெளியிட்டார்கள். அந்தப் பாடலுக்கு ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பறையிசையைப் பயன்படுத்தி இசையமைத்துள்ளார் அனிருத். அந்தப் பாடலுக்கான ஒலிப்பதிவு வீடியோ ஒன்றை நேற்று டுவிட்டரில் வெளியிட்டார். அதில் இந்த உலகத்திலேயே இப்படி நடந்திருக்காது என்று அனிருத் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த ஒரிசா மாநில இசை பல பெங்காலிப் படங்களில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
அப்படியிருக்கும் போது அனிருத் 'பேட்ட' சிங்கிள் பாடலுக்கு ஒரேயடியாக பில்ட்-அப் கொடுத்து வருகிறார், மேலும் பாடலைக் கேட்பதற்கு 'வேதாளம்' படத்தில் இடம் பெற்ற 'ஆலுமா டோலுமா' போடலைப் போலவே உள்ளதாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.