பத்து வருட பழைய பாலா திரும்பி வருவாரா? | கேரளாவில் சிஸ்டம் சரியா இருக்கு ; முதல்வரின் நடவடிக்கையை தொடர்ந்து ஹனிரோஸ் பாராட்டு | கால்பந்து வீராங்கணையாக மாறிய வித்யா மோகன் | கூடுதல் நேரத்துடனான 'புஷ்பா 2' வெளியீடு தள்ளி வைப்பு | சிறப்புக் காட்சி, கட்டண உயர்வு - முடிவை மாற்றிக் கொண்ட தெலுங்கானா அரசு | அமிதாப்பச்சன் படத்தில் நான் நடித்திருக்க கூடாது ; வெளிப்படையாகவே வருந்திய ராம்சரண் | குஷி கபூரிடம் ஸ்ரீ தேவியை பார்த்தேன் : அமீர்கான் | அஜித் பிறந்தநாளில் வெளியாகும் சூர்யாவின் ரெட்ரோ | நான் சினிமாவில் இருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை : சிவகார்த்திகேயன் | பாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்த்த அமரன் பட இயக்குனர் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 44வது படத்தின் டைட்டில் 'ரெட்ரோ' என்று சமீபத்தில் அறிவித்தார்கள். அதையடுத்து தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக 'மௌனம் பேசியதே, ஆறு' படங்களுக்கு பிறகு மீண்டும் திரிஷா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு 'பேட்டைக்காரன்' என்ற டைட்டில் வைக்க ஆர்.ஜே. பாலாஜி திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கலுக்கு வழியாக உள்ள நிலையில் அப்போது டைட்டிலும் அறிவிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே ரஜினி 'பேட்ட' என்ற படத்திலும், விஜய் 'வேட்டைக்காரன்' என்ற படத்திலும் நடித்துள்ள நிலையில் தற்போது சூர்யா படத்துக்கோ 'பேட்டைக்காரன்' என்று டைட்டில் வைத்துள்ளார்கள்.