என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துள்ள படம் ரெட்ரோ. மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. ஆக்ஷன், எமோஷனல் கலந்த 1990களில் நடக்கும் கதையில் இந்த படம் உருவாகி இருப்பதாக கூறுகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
மேலும் இந்த படத்தில் சூர்யாவை, கேங்ஸ்டராக மட்டுமின்றி உருக்கமாக காதலிக்கும் காட்சிகளிலும் ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள். அதோடு நகைச்சுவை காட்சிகளும் இந்த படத்தில் அதிகமாக இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் நான் இயக்கிய பேட்ட படத்திற்கு பிறகு இந்த படம் ரசிகர்களை அதிகம் கவரக்கூடிய படமாக இருக்கும் என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.