நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வரும் திரிஷா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். குறிப்பாக, தமிழில் இந்த ஆண்டில் மட்டும் அஜித்துக்கு ஜோடியாக அவர் நடித்து விடாமுயற்சி, குட்பேட் அக்லி என்ற இரண்டு படங்கள் திரைக்கு வந்துள்ளன. அதேபோல் மலையாளத்தில் டொவினோ தாமஸ் உடன் நடித்த ஐடென்டிட்டி என்ற படம் இந்த ஆண்டு ஜனவரியில் திரைக்கு வந்தது.
இந்த நிலையில், தற்போது தனது இணைய பக்கத்தில் அடுத்தடுத்து தனது நடிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் திரிஷா. அதில், தக்லைப், சூர்யா- 45 , விஸ்வாம்பரா போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த படங்களில் மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் தக்லைப் படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து, சூர்யா- 45 வது படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ள விஸ்வாம்பரா இன்னும் இரண்டு மாதங்களில் திரைக்கு வருகிறது. அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டில் மட்டும் திரிஷா கதாநாயகியாக நடித்து இதுவரை மூன்று படங்கள் திரைக்கு வந்துள்ள நிலையில், அடுத்தபடியாக இன்னும் மூன்று படங்கள் திரைக்கு வரப்போகின்றன.