ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
தமிழ் சினிமாவில் தமிழ் படங்களை பொறுத்தவரை ஒரு திரைப்படம் வெளியாகி 4 வாரங்கள் கழித்து ஓடிடி தளங்களில் வெளியாவதே இப்போது வழக்கமாக உள்ளது. ஆனால் வட இந்திய படங்களை பொறுத்தவரை 8 வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மட்டுமே திரையிடப்படும் என்ற நிபந்தனை உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு 4 வாரத்திலே படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவதால் திரையரங்குகளில் வரும் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
இது சம்பந்தமாக பலமுறை தயாரிப்பு நிறுவனங்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தே வந்தது. இதுவரை எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் சமீபத்தில் இது சம்பந்தமாக தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் ஒரு சிறப்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் இனிமேல் 8 வாரங்கள் கழித்து ஓடிடி தளங்களில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் மட்டுமே இனிமேல் திரையரங்கில் வெளியாகும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறியதாகவும், இந்த நடைமுறை வருகிற ஜூன் மாதம் முதல் நடைமுறையில் வரவேண்டும் என்றும் தயாரிப்பாளர்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த பேச்சு வார்த்தையில் தயாரிப்பாளர்கள் 5 நாட்கள் கால அவகாசம் கேட்டதாகவும், மேற்படி என்ன செய்யலாம் என்ற யோசனையில் தயாரிப்பாளர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் சுமூகமான முடிவு எட்டப்படமா, இதேபோல் இன்னும் இழுபறி நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த சூழ்நிலையால் திரையரங்க உரிமையாளர்களுக்கு சுமூகமான முடிவு வந்தால் ஓடிடி நிறுவனங்களுக்கு விற்கும் படங்களின் உரிமை தொகை என்னவாகும், 8 வாரங்கள் கழித்து வெளியானால் பார்வையாளர்களை ஈர்க்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.