டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

விஜய் சேதுபதி, மிஷ்கின், பகத் பாசில், சமந்தா, நடிக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். ஆரண்யகாண்டம் படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார். இந்தப் படத்தில் நடித்த நதியா, பின்னர் திடீரென விலகினார், அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். நதியா ஏன் விலகினார் என்பது பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மிஷ்கினை, நதியா கன்னத்தில் அறைவது போன்ற ஒரு காட்சியை இரண்டு நாட்கள் படமாக்கினர். காட்சி யதார்த்தமாக வர வேண்டும் என்பதற்காக மிஷ்கின், "என்னை நிஜமாகவே அடியுங்கள்" என்று நதியாவிடம் கூறியிருக்கிறார். அதனால் நதியாவும் நிஜமாகவே அடித்துள்ளார். ஆனால் இயக்குனர் எதிர்பார்த்த நடிப்பு நதியாவிடமிருந்து வரவில்லை. இரண்டு நாட்கள் இந்தக் காட்சி படமாக்கப்பட்டது. நதியா 56 டேக்குகளில் 56 முறை நிஜமாகவே மிஷ்கினை அடித்துள்ளார்.
இதனால் மனம் வெறுத்துப்போன நதியா, இதற்கு மேல் என்னால் நடிக்க முடியாது வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று படத்திலிருந்து விலகி விட்டார். அதன்பிறகு நடிக்க வந்த ரம்யா கிருஷ்ணன், இரண்டே டேக்கில் இரண்டே அடி அடித்து டேக்கை ஓகே பண்ணினார். என்கிறார்கள்.
ஆனால் நிறைய அடி வாங்கிய மிஷ்கின், "இனிமேல் அவரிடம் அடிவாங்கி நடிக்க மாட்டேன். நான் விலகி கொள்கிறேன்" என்று சொன்னதாகவும், "நடிக்க வராதவங்களை ஏன் நடிக்க வைக்கிறீங்க" என்று நதியாவை வைத்துக் கொண்டே பேசியதாகவும், இதனால் அவர் கோபித்துக் கொண்டு படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.