மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
அன்பானவன் அசராவதன் அடங்காதவன் படம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கும், அப்படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பனுக்கும் பிரச்னை ஓடிக் கொண்டிருக்கிறது. இடையில் அமைதியாக இருந்த இந்த பிரச்னை இப்போது மீண்டும் கிளம்பி உள்ளது.
இதுதொடர்பாக மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தை நாடியிருக்கிறார் மைக்கேல் ராயப்பன். இந்த விஷயத்தில் சிம்புவிற்கு மீண்டும் ரெட் கார்ட் போட ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், சுந்தர் சி இயக்கத்தில் அவர் நடித்து வரும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சிம்பு ரசிகர்கள் விஷால் மீது சரமாரியாக கண்டனங்களை சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்
அதில் அவர் கூறியிருப்பதாவது : என்னை நேசிப்பவர்களுக்கும், ரசிகர்களுக்கும் அன்பான வேண்டுகோள். திரைத்துறையில் சமீபத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து வருந்த வேண்டாம். எந்த தனிநபரும் நம்மை ஓரங்கட்ட முடியாது. எதுவாக இருந்தாலும் கவுன்சில உறுப்பினர்களால் குழுவாக எடுக்கப்படும். அதனால் பதற்றமடைய வேண்டாம். யாரையும் குறிவைத்து விமர்சிக்க வேண்டாம்.
எப்போதும் அன்பையே பரப்புங்கள். உங்களின் ஆதரவுக்கு நன்றி, நீங்கள் இல்லாமல் நான் இல்லை. நமது கடமையை செய்வோம். கண்டிப்பாக பொங்கலுக்கு வர்றோம் என்றார்.