பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் |
ராஜ்பாபு இயக்கத்தில் நகுல், ஆஞ்சல் முஞ்சால், பிரகாஷ் ராஜ், நாசர் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்க உருவாகி உள்ள படம் செய். இப்படம் வருகிற நவ., 16-ம் தேதி ரிலீஸாகிறது.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நகுல் பேசியதாவது : நவ., 16-ல் விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படத்தை அனுமதியின்றி ரிலீஸ் செய்வதால், எங்களது செய் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் உருவாகி உள்ளது. எங்களுக்கு கிடைக்க வேண்டிய தியேட்டர் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.
இந்தச் சங்கம், விதிமுறை எல்லாம் எதற்கு?. இந்த தயாரிப்பாளர் கேரளாவைச் சேர்ந்தவர். தமிழ்படம் தயாரிக்க வேண்டும் என்று வந்தார். இப்படியெல்லாம் சூழல் இருந்தால் தயாரிப்பாளர்கள் இனி எப்படி வருவார்கள். விஷால் எங்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறார். எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்றார்.