'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் நடித்த சர்க்கார் படம் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது. தமிழகம் முழுக்க சுமார் 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில் சென்னையில் உள்ள ஏஜிஎஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு சர்க்கார் படத்தை கொடுக்க மறுத்து விட்டதாக கடந்த சில தினங்களாக படத்துறையில் பரபரப்பான பேச்சு அடிபடுகிறது.
தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு சொந்தமான ஏஜிஎஸ் சினிமா என்கிற மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சென்னையில் தி.நகர். வில்லிவாக்கம், மதுரவாயல், ஓஎம்ஆர் போன்ற இடங்களில் உள்ளன.
சர்கார் படத்தின் சென்னை, செங்கல்பட்டு ஏரியாவின் உரிமையை பெற்றுள்ள விநியோகஸ்தர்கள், ஏஜிஎஸ் குழும தியேட்டர்களுக்கு சர்கார் படங்களை தர மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இதன் பின்னணி காரணம் என்ன என்று விசாரித்தபோது....
சர்கார் படத்தின் செங்கல்பட்டு ஏரியா உரிமையை வாங்கும்படி ஏஜிஎஸ் நிறுவனத்தை கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள். இந்த காரணங்களுக்காகவே அவர்களுக்கு படம் கொடுக்க மறுப்பதாக படத்துறையில் ஒரு பேச்சு நிலவுகிறது.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சர்கார் படத்தை ஏஜிஎஸ் தியேட்டர்களுக்கு கொடுக்கவில்லை என்ற தகவல் அறிந்ததும் விஜய் அப்செட்டில் இருக்கிறாராம்.
காரணம் ஏஜிஎஸ் தியேட்டர்களில் மட்டுமே சுமார் இரண்டரை கோடிகளுக்கு மேல் ஷேர் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு வசூலிக்கும் ஏஜிஎஸ் தியேட்டர்களுக்கு படம் கொடுக்கவில்லை என்பது விஜய்யை வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறதாம்.