அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை | மகாநடி படத்தில் நடிக்க மறுத்த துல்கர் சல்மான்; நாக் அஸ்வின் வெளியிட்ட புது தகவல் | வேலை வேண்டும் என்பதற்காக என்னையே விற்கும் ஆள் அல்ல நான்; ரெஜினா கசான்ட்ரா தில் பேச்சு | பிளாஷ்பேக் : 80 ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமை கொடுமை பற்றி பேசிய படம் | ஜெய் பீம் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டது தவறான முடிவு; மனம் திறந்த சூர்யா | 2025ல் சிவகார்த்திகேயன் நடிக்க 'புறநானூறு' ஆரம்பம் |
பிரபல பாலிவுட் இயக்குனர் பிரதீப் சர்க்கார் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 67. கடந்த 2021ல் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானதில் இருந்து அவரது உடல்நிலை நலிவுற்று இருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த மார்ச் 22ஆம் தேதி அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு பின்னர் தீவிர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்..பாலிவுட் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, வித்யா பாலன், ராணி முகர்ஜி ஆகியோர் நேரில் சென்று இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிராணியிடம் படத்தொகுப்பு உதவியாளராக சேர்ந்து பின்னர் அவரது இயக்கத்திலேயே சஞ்சய் தத் நடித்த முன்னாபாய் எம்பிபிஎஸ் என்கிற படத்தில் எடிட்டராக தனது திரையுலக பயணத்தை துவங்கினார். ஆனாலும் 2005இல் பரிணீதா என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்ததன் மூலம் இயக்குனராக மாறினார். இந்த படத்தில்தான் இவர் முதன்முதலாக நடிகை வித்யா பாலனை பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார்.
அதன் பிறகு ராணி முகர்ஜி நடித்த மர்தானி என்கிற வெற்றி படத்தையும் கொடுத்தார். அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றி பெற்று தற்போது மூன்றாம் பாகத்திற்கான அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது. திரைப்படங்கள் தவிர வெப் சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்திய இவர் 4 வெப் சீரிஸ்களையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.