பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை “இசைஞானி” இளையராஜா. | மாமன்னனே கடைசி : நல்ல படமாக அமைந்தது திருப்தி - உதயநிதி | தேவர் மகனுக்குப் பிறகு எனக்கு அருமையான படம் : வடிவேலு | 'ஜெயிலர்' படப்பிடிப்பு நிறைவு, கேக் வெட்டி கொண்டாட்டம் | வளர்ந்து வரும் நடிகருக்கு ஜோடியாகும் தமன்னா | விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்? | கமலின் 234 வது படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது | தங்கலான் படத்திற்காக பல பயிற்சிகளை பெற்ற மாளவிகா மோகனன் | ஆட்டோவில் சென்று ரசிகரின் அம்மாவிடம் உடல் நலம் விசாரித்த சூரி | மீண்டும் தனுஷூக்கு ஜோடியாக த்ரிஷா? |
பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 5 படங்கள் எதும் வெற்றியை பெறவில்லை. தற்போது இவர் சூரரைப்போற்று ஹிந்தி ரீ-மேக்கில் நடிக்கிறார். மேலும் 'படே மியான் சோட் மியான்' படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் டைகர் ஷெராப், பிருதிவிராஜ், சோனாக்சி சின்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த நிலையில் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் ஆகியோர் நேருக்கு நேர் மோதும் பிரமாண்டமான சண்டை காட்சியொன்று படமாக்கப்பட்டது. இதில் டூப் நடிகரை பயன்படுத்துமாறு அக்ஷய்குமாரிடம் படக்குழு அறிவுறுத்தியுள்ளார்கள். ஆனால் அவர் பிடிவாதமாக மறுத்து விட்டார். இதைதொடர்ந்து சண்டை காட்சியின் போது அக்ஷய்குமாருக்கு பலத்த அடிபட்டு முழங்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.