குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரோனா தாக்கம் ஆரம்பித்தது முதல் தற்போது வரை ஒரு நடிகையின் அதிக படங்கள் ரிலீசாகி இருக்கிறது என்றால் அது கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள்தான். இந்த இரண்டு வருடங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்த 6 படங்கள் வெளியாகிவிட்டன. இது தவிர தற்போது இன்னும் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் மகேஷ்பாபுவுடன் முதன்முறையாக அவர் இணைந்து நடித்துள்ள சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் வரும் மே மாதம் வெளியாக இருக்கிறது. பரசுராம் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
தற்போது மகேஷ்பாபு தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் சுற்றுலாவில் இருக்கும் நிலையில் இங்கே கீர்த்தி சுரேஷ் இந்த படத்திற்கான தனது முதல்கட்ட புரமோஷனை ஆரம்பித்துள்ளார். இந்தப்படம் குறித்து அவர் கொடுத்துள்ள வீடியோ பேட்டி ஒன்றின் புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் இந்த முழு புரமோஷன் வீடியோவும் வெளியாக இருக்கிறது.