ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பஹத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியுடன் உருவாகியுள்ள படம் விக்ரம். இந்தப்படம் வரும் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் குறித்து இதுவரை வெளியான தகவல்கள் எல்லாமே விஜய்சேதுபதிக்கு மூன்று பேர் ஜோடி என்றும் அவர்கள் சின்னத்திரை புகழ் ஷிவானி, மைனா நந்தினி மற்றும் விஜே மகேஸ்வரி ஆகியோர் என்றும் சொல்லப்பட்டது.
அதேசமயம் கமலுக்கும் அல்லது பஹத் பாசிலுக்கும் ஜோடி இருக்கிறதா என்றோ அவர்கள் யார் என்றோ இதுவரை தகவல் வெளியாகவில்லை. இந்தநிலையில் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ள ஷான்வி ஸ்ரீவாத்சவா என்பவர் விக்ரம் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் கமலுடன் இணைந்து நடித்துள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே வந்துபோகும் அவர் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளாரா அல்லது முக்கிய வேடத்தில் நடித்துள்ளாரா என்பது பற்றிய தகவல் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது.