வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி |

தளபதி படத்தில் இயக்குனர் மணிரத்னத்துடன் முதன்முதலாக இணைந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், அதைத்தொடர்ந்து அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளராகவே இப்போதுவரை தொடர்கிறார். ஒரு பக்கம் ஒளிப்பதிவாளராக இருந்து கொண்டு இன்னொரு பக்கம் இயக்குனராக மாறி படங்களையும் இயக்கி வருகிறார் சந்தோஷ் சிவன்.
அந்த வகையில் தற்போது அவர் மலையாளத்தில் மஞ்சுவாரியர், காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள ஜாக் அண்ட் ஜில் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளிவர தயாராகி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். மேலும் சந்தோஷ் சிவனின் இந்த படம் குறித்து பாராட்டி ஒரு வீடியோவையும் வெளியிட்டு உள்ளார் மணிரத்னம்.
அதில் அவர் கூறும்போது, “சந்தோஷ் சிவன் ஜாக் அண்ட் ஜில் என்கிற புதிய படத்தை இயக்கியுள்ளார். இதுபோன்ற ஒரு பெயரில் அவரது படம் வருவதற்காகவே சந்தோஷ் சிவனை தாராளமாக நம்பலாம். ஆனால் அவர் என்ன விஷயத்தோடு இந்தப்படத்துடன் வருகிறார் என்பது உங்களுக்கு தெரியாது. அதேசமயம் அவர் எப்போதும் அளவற்ற ஆச்சரியங்களை கொடுக்கக் கூடியவர்.. அதனால் உங்களை பிரமிக்க வைப்பதை அவர் நிறுத்த மாட்டார். இந்த படத்தில் மஞ்சுவாரியார், காளிதாஸ் மற்றும் சௌபின் சாகிர் ஆகியோரும் இருக்கின்றனர். இந்த படத்தின் டீசரை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். ஆல் த பெஸ்ட்” என அந்த வீடியோவில் வாழ்த்தியுள்ளார் மணிரத்னம்.




