'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களிலும் கதாநாயகியாக நடித்ததன் மூலம் கன்னட உலகைத் தாண்டி தென்னிந்திய அளவில் பிரபலமான முகமாக மாறிவிட்டார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. இந்த நிலையில் தொடர்ந்து பல மீடியாக்களுக்கு அவர் பேட்டி அளித்து வருகிறார். ஏற்கனவே ஒரு பேட்டியில் அவர் மலையாள திரையுலகம் பற்றி கூறும்போது, மலையாளத்தில் தான் முதன்முதலாக பார்த்தது துல்கர் சல்மான் நடித்த சார்லி படம்தான் என கூறியிருந்தார்.
தற்போது இன்னொரு பேட்டியில் மலையாள திரையுலகம் பற்றி மீண்டும் அவர் சிலாகித்துக் கூறும்போது, “மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படத்தை தியேட்டரில் சென்று பார்த்தேன். அதன்பிறகு அந்தப்படத்திற்கு நான் காதலியாகவே மாறி விட்டேன். அந்த அளவுக்கு என்னை அந்த படம் ஈர்த்து விட்டது. கேஜிஎப் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கேரளா வந்தபோது அந்த படத்தின் இயக்குனரான நடிகர் பிரித்விராஜை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அப்போது அவரிடம் உடனடியாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுங்கள் என நேரிலேயே கோரிக்கை வைத்தேன். அந்த அளவிற்கு அதன் இரண்டாம் பாகத்தை பார்க்கவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி.