'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் |

சுசீந்திரன் இயக்கி உள்ள படம் ஜீனியஸ். புதுமுகம் ரோஷன், மலையாள நடிகை பிரியா லால், ஆடுகளம் நரேன், ஜெயபிரகாஷ், சிங்கம்புலி, மீரா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் இசை அமைத்துள்ளார், ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் நாளை வெளிவருகிறது.
இந்தப் படத்தின் கதை யாருடைய கதையும் இல்லை. தனக்கு டீக் கடையில் கிடைத்தது என்கிறார் சுசீந்திரன். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு நபரை பார்த்தேன். ஐடியில் வேலை செய்பவரை போல் நன்றாக உடை அணிந்துக் கொண்டு டீ ஆர்டர் செய்து அதை குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் திரும்பி சென்றார்.
அப்படி சென்ற அவரிடம் கடைகாரர் பணம் கேட்ட போது அவரிடம் பயங்கரமாக கோபப்பட்டு நாளை தருகிறேன் என்று கத்தி கூறினார். அந்த கோபம் பயங்கரமானதாக இருந்தது. நல்ல படித்த, பெரிய வேலையில் உள்ள நபர் போல் தோற்றமளித்த அவரின் ஸ்ட்ரெஸ்க்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போது தோன்றிய கதை தான் இப்படத்தின் கதை.
இக்கதையை நான் விஜய், அல்லு அர்ஜுன் மற்றும் ஜெயம் ரவி போன்ற பல ஹீரோக்களிடம் கூறியுள்ளேன். அனைவருக்கும் இக்கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் இக்கதையில் ஹீரோ இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. ஹீரோவுக்காக கதை பண்ணாமல் இக்கதைக்கான ஹீரோவை படத்தின் கதையே முடிவு செய்தது.
இப்படம் கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும். தமிழில் வெளிவந்த படங்களில் கல்வி மையமாக கொண்டு வெளிவந்த திரைப்படங்களில் ஜீனியஸ் முக்கியமான படமாக இருக்கும். ஒரு படைப்பாளிக்கு கதையை எழுதிவிட்டு அதை படமாக திரையில் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும் எனக்கும் அந்த ஆசை இருந்தது, அது ரோஷன் மூலம் நிறைவேறியுள்ளது.
இன்று ஆங்கில வழி கல்வி முக்கியமான ஒன்றாகிவிட்டது. நமது அரசாங்கம் ஆங்கில வழி கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அப்போது தான் அனைவராலும் ஆங்கிலம் எளிதாக பயின்று பேச முடியும். இன்று ஆங்கிலம் மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. படத்தில் படிப்போடு விளையாட்டும் தேவை என்பதை மிகவும் ஆழமாக கூறியுள்ளோம் என்கிறார் சுசீந்திரன்.