டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி |
உலகளவில் பிரபலமான மீ டூ விவகாரம், இந்தியாவையும் ஆட்டி படைக்கிறது. பெண்கள் பாலியல் ரீதியாக தங்களுக்கு நேர்ந்த தொல்லைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக அமைந்த இந்த மீ டூ-வால் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் சிக்கி வருகின்றனர்.
தமிழகத்தில் வைரமுத்து மீது சின்மயியும், சுசி கணேசன் மீது லீனா மணிமேகலையும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் நடிகர்கள் ஜான் விஜய், ராதாரவி, நடன அமைப்பாளர் கல்யாண் ஆகியோரும் இதில் சிக்கினர்.
இந்நிலையில் நடிகர் அமித் பார்கவின் மனைவியும் தொகுப்பாளினியுமான ஸ்ரீரஞ்சனி, நடிகர் ஜான் விஜய் மீது பாலியல் தொல்லை புகார் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது : இந்த சம்பவம் 2014-ல் நடந்தது. இதை தைரியமாக பேச வைத்த எனது கணவர் அமித் மற்றும் சின்மயிக்கு நன்றி. ஜான் விஜய் பெண்களிடம் மிக மோசமாக நடந்து கொள்வார். ஒருமுறை நான் அவரை பேட்டி எடுத்தேன். ஒரு மாதத்திற்கு பிறகு நள்ளிரவில் எனக்கு போன் செய்து அந்த பேட்டி குறித்த விவரம் கேட்டார். நான் தூக்கத்தில் உள்ளேன், காலையில் பேசுகிறேன் என்றேன். தொடர்ந்து அவர் போனில் ஆபாசமாக பேசினார். உங்கள் மனைவியிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியதும் போனை கட் செய்துவிட்டார் என பதிவிட்டிருக்கிறார்.
மேலும், கடம் வித்வான் உமா சங்கர், அலுவலகம் ஒன்றில் தான் பணியாற்றியபோது, தனது இடுப்பை கிள்ளினார் என மற்றொரு பதிவில் கூறியிருக்கிறார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
ஜான் விஜய் மனைவி மன்னிப்பு
இதனிடையே மற்றொரு டுவிட்டர் பதிவில், நடிகர் ஜான் விஜய்யின் மனைவி, நடந்த விஷயங்களை கேட்டறிந்ததாகவும், தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளார். அவர் தானாக முன் வந்து மன்னிப்பு கோரியதை உண்மையாக பாராட்டுகிறேன் என கூறியுள்ளார் ஸ்ரீரஞ்சனி.