நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் | இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி | வாழ்க்கையிலேயே செய்த பெரிய தவறு பிக்பாஸ் - சக்தி | நவ., 14ல் வர்றோம்... : வந்தாச்சு சூர்யாவின் ‛கங்குவா' புதிய ரிலீஸ் அறிவிப்பு | பதம் பார்த்தது பாலியல் புகார் : ‛ரஞ்சிதமே' பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது |
பாலிவுட் நடிகையான மீதா வசிஷ்த் என்பவர் தெலுங்கு இயக்குனர் ஒருவர் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி தன்னை படுக்கைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ஷாருக்கான் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய தில் சே(தமிழில் உயிரே) திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தீவிரவாதியாக நடித்திருந்த இவர் தமிழில் வெளியான சிநேகிதியே படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்தார். தொடர்ந்து மராத்தி, பெங்காலி படங்களில் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் தொலைக்காட்சி தொடர்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் மீதா வசிஷ்த். சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் இந்த மீடூ விவாகாரம் குறித்து பேசியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “பல வருடங்களுக்கு முன்பு ஒரு தெலுங்கு பட இயக்குனர் அவரது படத்தில் எனக்கு வாய்ப்பு தருவதாக கூறி அது குறித்து பேசுவதற்காக ஹோட்டலில் தன்னுடைய அறைக்கு வர சொன்னார். அவரது அறைக்கு அருகிலேயே உள்ள பக்கத்து அறையில் தான் என்னுடைய நண்பர்கள் இருந்தனர். நான் மட்டும் சென்று இயக்குனரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் என்னுடைய படத்தில் உனக்கு வாய்ப்பு தருகிறேன் ஆனால் நீ என்னுடன் இரண்டு மாதம் தங்க வேண்டும் என்று கூறினார். எனக்கு ஆரம்பத்தில் அவர் கூறியது சரியாக புரியவில்லை. ஒருவேளை அவர் கூறிய ஆங்கிலத்தை நாம் தான் தவறாக புரிந்து கொண்டோமோ என்று நினைத்து மீண்டும் அவர் என்ன சொல்கிறார் என கேட்டபோது தான் இரண்டு மாதங்கள் அவருடன் தனியாக வசிக்க வேண்டும் என்று கூறினார்.
எனக்கு உங்கள் பட வாய்ப்பே வேண்டாம் என்று கூறி அங்கிருந்து வெளியேற முயற்சிக்கும்போது வாசலில் நின்று கொண்டு என்னை போக விடாமல் வலுக்கட்டாயமாக தடுத்தார். ஆனால் என்னுடைய சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த என்னுடைய நண்பர்கள் உடனடியாக அங்கே வந்ததால் அந்த இயக்குனரிடம் இருந்து தப்பித்தேன். அந்த சமயத்தில் அவர் இயக்கிய படம் தேசிய விருதும் பெற்றிருந்தது” என்று கூறியுள்ள மீதா வசிஷ்த் அந்த இயக்குனரின் பெயரை குறிப்பிட மறுத்துவிட்டார்.