பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் |
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கிலும் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர் நடிகர் ஜான் விஜய். அதேசமயம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலியல் குற்றங்களுக்கு எதிரான மீடூ என்கிற பிரச்சாரம் பரபரப்பாக கிளம்பியபோது அதில் ஜான் விஜய்யும் குற்றசாட்டுக்கு ஆளானார். அந்த சமயத்தில் அவர் அது குறித்து விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்ததோடு எதிர்காலத்தில் அப்படி இனி நடக்காது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் இது போன்று ஒரு மீடூ குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார் ஜான் விஜய்.
ஒரு பெண் பத்திரிகையாளர் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு தான் சென்றிருந்தபோது அங்கே வந்திருந்த நடிகர் ஜான் விஜய் தன்னை தவறான கண்ணோட்டத்துடன் தேவையற்ற வார்த்தைகளை பேசி அணுக முயற்சித்ததாகவும், ஆனால் அங்கிருக்கும் ஊழியர்கள் மற்றும் பவுன்சர்கள் எப்போதுமே பெண்களுக்கு பாதுகாப்பானவர்கள் என்பதால் தான் அவரிடம் இருந்து தப்பித்ததாகவும் கூறி எப்போதுமே இந்த மீ டூ பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து பேசி வரும் பின்னணி பாடகி சின்மயிக்கு இது குறித்து தெரிவித்திருந்தார்.
அதில் ஜான் விஜய் தான் ஒரு நடிகர் என்கிற கோதாவில் இதுபோன்று ஹோட்டலுக்கு, பார்ட்டிகளுக்கு வரும் பெண்கள் சிலரை வலுக்கட்டாயமாக குடிக்க அழைப்பதும் மற்றும் தன்னுடன் நடனமாட அழைப்பதும் என அவர்களை தனது அழைப்புக்கு நோ சொல்ல முடியாமல், எஸ் சொல்ல வைக்கும் விதமாக நடந்து கொள்வதும் என அவரது செயல்கள் பற்றி சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். இது குறித்த ஸ்கிரீன்ஷாட்டுகளை சின்மயி தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஜான் விஜய் மீதான இந்த புதிய மீ டூ குற்றச்சாட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.