சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
மலையாள திரையுலகில் பணியாற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் மற்றும் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக மலையாள திரை உலகில் சில முக்கியமான நடிகைகளால் உருவாக்கப்பட்டது தான் சினிமா பெண்கள் நல அமைப்பு. இதில் சீனியர் நடிகையான ரேவதி முதல் ரம்யா நம்பீசன், பார்வதி, பத்மப்பிரியா உள்ளிட்ட பலர் இணைந்து அவ்வப்போது பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக மீடூ புகாரில் சிக்கும் சினிமா பிரபலங்களுக்கு எதிராக கண்டனங்களை தெரிவிப்பதுடன் சில நேரங்களில் போராட்டங்களையும் மேற்கொண்டனர். மேலும் அப்படி குற்றச்சாட்டுக்கு ஆளாகும் சினிமா கலைஞர்களுடன் படங்களில் இணைந்து பணியாற்றுவதை தவிர்த்தும் வந்தனர்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படத்தில் நடிகை பார்வதி, குணச்சித்திர நடிகர் அலன்சியர் லே லோபஸ் என்பவருக்கு மகளாக நடித்திருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகர் அலன்சியர் லே தன்னுடன் நடித்த ஒரு அறிமுக நடிகையிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக மீடூ புகாரில் இடம் பிடித்தார். இதே பார்வதி உள்ளிட்ட சினிமா பெண்கள் நல அமைப்பு உறுப்பினர்களின் கண்டனத்திற்கும் ஆளானார்.
அதன்பிறகு தனது செயல்களுக்காக தன்னை மன்னித்து விடுமாறு பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் அலன்சியர் லே. அப்படி அவர் மன்னிப்பு கேட்டதற்கும் அவரது மன மாற்றத்திற்கும் பார்வதி உள்ளிட்ட பல நடிகைகளும் அந்த சமயத்தில் தங்களது பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தனர். அதனால்தான் தற்போது அலன்சியர் லேவுடன் இணைந்து நடிக்க பார்வதி ஒப்புக் கொண்டார் என்று தெரிகிறது.