சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் |

குறுகிய காலத்தில் ஏராளமான வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது, சண்டக்கோழி 2-ம் பாகம், சர்கார் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் ஒரே ஒரு மலையாளப்படம் தவிர வேறு எந்தப் படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. காரணம் 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடித்து வருவதால் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறதாம். அதனால் 2 மாதங்கள் பிரேக் எடுத்துக் கொள்ளப்போகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
3 ஆண்டுகளில் இத்தனை படங்கள் நடித்திருக்கிறோமா என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. 3 ஆண்டுகளாக சரியான தூக்கம் இல்லை, ஓய்வு இல்லை. அதனால் 20 கதைகள் கேட்டு வைத்திருக்கிறேன். எதிலும் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை. 2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கப்போகிறேன். இதற்காக வெளிநாட்டுக்கெல்லாம் போகவில்லை. என் வீட்டிலேயே இருப்பேன். தோட்ட வேலை செய்வேன். கவிதை எழுதுவேன், சமையல் செய்வேன். வயலின் கத்துக் கொண்டிருந்தேன், அதை தொடர்வேன். இந்த ஓய்வுக்கு பிறகு தான் நடிப்பேன் என்றார்.