Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விழா இல்லாமலே வெளியான '2.0' டீசர்

13 செப், 2018 - 14:58 IST
எழுத்தின் அளவு:
2point0-teaser-released-without-function

இந்திய திரையுலகத்தில் முதன் முறையாக அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள '2.0' படத்தின் டீசர் இன்று காலை வெளியானது. இந்த டீசர் ஏற்கெனவே ஆறு மாதம் முன்பாகவே இணையங்களில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த டீசரையே தான் வேறு எந்த மாற்றமும் இல்லாமல் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.

'2.0' படத்தின் இசை, டீசர், டிரைலர் வெளியீடு ஆகியவை பற்றி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன்படி அக்டோபர் மாதம் துபாயில் இசை வெளியீடும், நவம்பர் மாதம் ஐதராபாத்தில் டீசர் வெளியீடும், டிசம்பர் மாதம் சென்னையில் டிரைலர் வெளியீடும் இருக்கும் என்றார்கள்.

அதன்படி, இசை வெளியீடு மட்டுமே கடந்த வருடம் அக்டோபர் மாதம் துபாயில் நடைபெற்றது. ஆனால், டீசர், டிரைலர் வெளியீடு ஆகியவை நடைபெறவில்லை. அந்த விழாக்கள் தள்ளி வைக்கப்பட்டது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் அவர்கள் வெளியிடவும் இல்லை. பட வெளியீடும் தள்ளிப் போனதால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதனிடையே, கடந்த வாரம் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவித்தார்கள். எந்த ஒரு விழாவையும் நடத்தாமல் யு டியுபிலும், தியேட்டர்களிலும் இன்று '2.0' டீசர் வெளியானது. டிரைலர் வெளியீட்டு விழாவாவது நடைபெறுமா அல்லது அதையும் டீசரைப் போலவே வெளியிடுவார்களா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
விஸ்வாசத்தில் அதிரடியான ஓப்பனிங் பாடல்விஸ்வாசத்தில் அதிரடியான ஓப்பனிங் ... சமந்தாவின் எதிர்கால திட்டம் சமந்தாவின் எதிர்கால திட்டம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

raja - chennai,இந்தியா
14 செப், 2018 - 11:41 Report Abuse
raja முதல்முறையாக டீஸர் தியேட்டரில் தனியாக திரையிட்டது இல்ல இந்த அளவு மாஸ் எந்த படத்துக்கும் கிடையது தமிழ் மட்டும் அல்ல இந்தியன் மாஸ் no .1
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
14 செப், 2018 - 09:27 Report Abuse
Raman Ganesan பாவம் கேடி கனடா இதுவரை 2 கோடி பேர் பார்த்து இருக்காங்க ALL RECORDS பிரேக் பண்ணிட்டாங்க KANADALA துண்டு வாங்கி தலைல போட்டுக்கோ
Rate this:
Jay -  ( Posted via: Dinamalar Android App )
14 செப், 2018 - 04:01 Report Abuse
Jay Teaser itself is a grand function to all over the globe thalaivar fans. Teaser at its best. We must support these type of movies. Taking regional (Tamil) movie to Hollywood is not a small thing. So understand before you comment.
Rate this:
srinivasan - Accra,கானா
13 செப், 2018 - 20:48 Report Abuse
srinivasan எல்லோருக்கும் தெரியும் இது டீஸர் என்று.. உலகத்தரம் வியந்த இந்த டீசெர் நம் பாராட்டுக்கு உகந்தது. தினமலர் அவரக்ளுக்கு, முடிந்தால் அந்த திரை படடத்திற்கு அதரவு தெரிவியுங்கள், இல்லையென்றால் சும்மாஇருங்கள்.
Rate this:
KayD - Mississauga,கனடா
13 செப், 2018 - 20:08 Report Abuse
KayD தியேட்டர் ளையும் ஆளே இல்லாம இருப்பதற்கான அறிகுறி ... பாவம் லைக்கா.. தலைவர் கொஞ்சம் இப்போவாவது யோசிக்கணும்...ஷங்கர் ப்ளீஸ் போதும்.. டெக்னாலஜியை காட்ட ஹாலிவுட் இருக்கு ..நீங்க உங்க ஸ்டைலில் நல்ல படம் கொடுங்க.. பெட்டெர் லக் நெஸ்ட் தடவை..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  Tamil New Film Watchman
  • வாட்ச்மேன்
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Indian 2
  • இந்தியன் 2
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :ஷங்கர்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in