2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பிரபுதேவா நடிப்பில் இந்த வருடம் 'களவாடிய பொழுதுகள்', 'குலேபகாவலி', 'மெர்குரி', 'லக்ஷ்மி' என 4 படங்கள் ரிலீஸாகிவிட்டன. இந்த நான்கு படங்களும் கமர்ஷியலாக வெற்றியடையவில்லை. ஆனாலும், 'பொன் மாணிக்கவேல்', 'யங் மங் சங்', 'தேள்', 'காமோஷி', 'தேவி 2' மற்றும் 'சார்லி சாப்ளின் 2' என 6 படங்கள் பிரபுதேவா கைவசம் இருக்கின்றன.
இதுதவிர, சல்மான்கான் நடிப்பில் 'தபாங் 3' என்ற படத்தை இயக்க இருக்கிறார் பிரபுதேவா. இப்படத்தின் ஷூட்டிங், அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் படங்களில் 'சார்லி சாப்ளின் 2' படம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.
சக்தி சிதம்பரம் இயக்கிவரும் இந்தப் படத்தில், பிரபுதேவா ஜோடியாக நிக்கி கல்ராணி மற்றும் அதா ஷர்மா இருவரும் நடிக்கின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, டிஜிட்டல் உரிமை இரண்டும் சேர்த்து முன்னணி டிவி சேனல் ஒன்று வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
இதனிடையே வருகிற 14-ம் தேதி இந்தப் படத்தின் சின்ன மச்சான் என்கிற சிங்கிள் ட்ராக் வெளியாகிறது.