சபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா? | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' | 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி | திரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா என இளம் நடிகர் பட்டாளத்தையே களம் இறக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்..
அந்தவகையில் மலையாளத்தில் இருந்து மணிகண்ட ஆச்சாரி என்பவரை இந்தப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க அழைத்து வந்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியாகி பாராட்டு பெற்ற கம்மட்டிப்பாடம் படத்தில் கவனித்தக்க அறிமுகமாக உள்ளே நுழைந்தவர் தான் இந்த மணிகண்ட ஆச்சாரி.
தற்போது லக்னோவில் நடைபெற்று வரும் பேட்ட படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள மணிகண்ட ஆச்சாரி, வெள்ள பாதிப்பின்போது கேரளாவிற்கு உதவி செய்த விஜய்சேதுபதிக்கு கேரளா மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.