ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடித்து 2014ம் ஆண்டு வெளிவந்த படம் 'கத்தி'. அந்த வருடத்தின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படம் கடந்த ஆண்டு தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க 'கைதி நம்பர் 150' என்ற பெயரில் ரீமேக் ஆகி பெரிய வெற்றியைப் பெற்றது. சுமார் 10 வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்த சிரஞ்சீவிக்கு அந்தப் படத்தின் வெற்றி அற்புதமான ரீ-என்ட்ரி ஆக அமைந்தது.
இப்போது 'கத்தி' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்களாம். பிரபல இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாரி 'கத்தி' படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார். ஏற்கெனவே தமிழில் வெளிவந்த 'ரமணா' படத்தின் உரிமையை வாங்கி 'கப்பார் இஸ் பேக்' என்ற பெயரில் தயாரித்து 2015ம் ஆண்டு வெளியிட்டு வெற்றி பெற்றார். இப்போது மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படமான 'கத்தி' பட ரீமேக் உரிமையை சஞ்சய் லீலா பன்சாலி வாங்கியுள்ளார்.
ஹிந்தி ரீமேக்கிற்கான நட்சத்திரத் தேர்வு தற்போது ஆரம்பமாகியுள்ளதாம். விரைவில் அது பற்றி அறிவிக்க உள்ளார்கள். இப்படத்தை சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்க மட்டும் செய்வாராம். படத்தை இயக்கப் போவது வேறு ஒரு இயக்குனர்.