ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
காக்கா முட்டை படம் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படத்தில் அவர் இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அதையடுத்து ஆறாது சினம் என்ற படத்திலும் ஒரு சிறுமிக்கு அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், பின்னர் கல்லூ¡¢ மாணவி உள்பட ரொமான்டிக் வேடங்களில் நடிக்க ஆசைப்பட்டார்.
ஆனால், அவரைத்தேடிச்செல்வதெல்லாமே சற்று முதிர்ச்சியான வேடங்கள்தான். அந்த வகையில், தற்போது சாமி-2வில் அப்பா விக்ரமிற்கு ஜோடியாக நடித்து வருபவர், பிரபுதேவா நடித்துள்ள லட்சுமி படத்திலும் பத்து வயது சிறுமிக்கு அம்மாவாக நடித் துள்ளார்.
இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், காக்கா முட்டைக்குப்பிறகு அதே அம்மா இமேஜை தொடர விடக் கூடாது என்று இளமையான கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் என்னைத்தேடி வருவதோ பெரும்பாலும் குடும்பத்தலைவி வேடங்கள்தான். அதுவும் சிறுவர், சிறுமிகளுக்கு அம்மா வேட மென்றால் நடிக்கதான் என்னை தேடிவருகிறார்கள்.
குறிப்பாக, மானாட மயிலாட நிகழ்ச்சியில் வெற்றி பெற்று சினிமாவுக்கு வந்த என்னை யாருமே பாடல் காட்சிகளில்கூட நடனமாட விடுவதில்லை என்பதுதான் எனது நீண்டநாள் வருத்தமே. இப்போது பிரபுதேவாவுடன் நடித்துள்ள லட்சுமி என்ற படம் நடனத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம்தான். இந்த படத்திலும்கூட நடனமாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எமோசனலான குடும்பத்தலைவி வேடம்தான்.
அதனால் எனது நடிப்பைத்திறமையை வெளிப் படுத்த வாய்ப்பு கிடைத்து வருவது போன்று நடனத்திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்புகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.