பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் |
தமிழில் கண்ணே கலைமானே படத்தை முடித்துவிட்ட தமன்னா, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி மற்றும் குயீன் ரீமேக்காக உருவாகிவரும் தட் இஸ் மகாலட்சுமி ஆகிய படங்களில் மாறிமாறி நடித்து வருகின்றார். இந்தநிலையில் கன்னடத்தில் ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவதற்கு சம்மதித்துள்ளார் தமன்னா.
ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவது தமன்னாவுக்கு புதிது அல்ல.. அதேபோல கன்னடமும் அவருக்கு புதிதல்ல.. ஏற்கனவே கன்னடத்தில் ஜாகுவார் என்கிற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு அங்கே தனது முதல் என்ட்ரியை பதிவு செய்துள்ளார் தமன்னா.
தற்போது கன்னட ஹீரோ யாஷ் நடிக்கவுள்ள கே.ஜி.எப் என்கிற படத்தில் தான் ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார். ஆச்சர்யமாக இந்தப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.