ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த வருடம் வெளியாகி பெரிதும் பாராட்டப்பட்ட "8 தோட்டாக்கள்", படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். அவருடைய அடுத்த படத்துக்கு "குருதி ஆட்டம்" என பெயரிடப்பட்டுள்ளது. அதர்வா இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ராக் போர்ட் என்டேர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ .பி கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கிறார்கள்.
"முழுக்க, முழுக்க மதுரை மாநகரின் பின்னணியில் உருவாகும் படமாகும். திரில்லர் பிண்ணனியில் உருவாகும் படம் இது. ஒரு வெற்றி படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும். நாளுக்கு நாள் தன்னுடைய கதாநாயகன் அந்தஸ்த்தை உயர்த்தும் அதர்வா, இந்த படத்தின் கதாநாயகன், அவருடைய முழு திறமைக்கும் தீனி போடும் படமாக "குருதி ஆட்டம்" அமையும். கதாநாயகி தேர்வு நடைப் பெற்று கொண்டு இருக்கிறது. இந்த மாதத்தின் இறுதியில் படப்பிடிப்பு துவங்கும்" என்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.