ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவு காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் சில தினங்கள், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது என்றும், மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே அவரை பார்க்க தினம் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று நடிகர்கள் விஜய், அஜித், கவுண்டமணி ஆகியோர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து திமுக., செயல் தலைவர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்து சென்றனர்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் இன்று நலம் விசாரித்தார்.