அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நாயகியாக அறிமுகமான 'தடக்' படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்தப் படம் 70 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அறிமுக நட்சத்திரங்கள் நடித்த படத்திற்கு இந்த அளவிற்கு வசூல் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள். இருப்பினும் ஒரிஜனல் மராத்தி படமான 'சாய்ராட்' வசூலை 'தடக்' படம் முறியடிக்குமா என்பது சந்தேகம்தான்.
தன் அறிமுகப் படம் பெரிய வெற்றி பெற்றது குறித்து ஜான்வி கபூர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். “படம் வெற்றி பெற்றதால் என்னிடமிருந்த டென்ஷன் குறைந்துவிட்டது. கடந்த இரண்டு வாரங்களாக ஒரு படபடப்புடனேயே இருந்தேன். அனைத்து மீடியாவின் பார்வையும் என் மீது தான் இருந்தது. நான் எப்படியிருக்கிறேன், எப்படி நடித்திருக்கிறேன் என்றே அனைவரும் விமர்சித்து வந்தார்கள். இப்போது படம் வெற்றி பெற்றுவிட்டதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.