ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் போன்ற படங்களை இயக்கியவர் நடிகர் தம்பி ராமைய்யா. தற்போது தனது மகன் உமாபதியை வைத்து மணியார் குடும்பம் என்ற படத்தை இசையமைத்து, இயக்கியுள்ளார். தானும் உமாபதிக்கு அப்பாவாக இந்த படத்தில் நடித்துள்ளார் தம்பி ராமைய்யா.
குடும்பத்தில் நடந்த சில விசயங்களின் தொகுப்பு தான் இந்தப்படம் என்று கூறும் தம்பி ராமைய்யா, குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இயக்கியிருக்கிறேன் என்கிறார்.
ஏற்கனவே அனைத்துகட்ட பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகயிருந்த மணியார் குடும்பம் படத்திற்கு சென்சார்போர்டு யு சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதனால் ஆகஸ்ட் 3-ந்தேதி படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.