ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'பாகுபலி 2' படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருந்தாலும், அந்தப் படத்தில் பொருத்தமான ஜோடியாக இருந்த பிரபாஸ், அனுஷ்கா இருவரும் முக்கியக் காரணம். பிரபாஸ் வீரமான ஆண் மகனாய் வலிமையுடன் அசத்த, அனுஷ்கா வீரத்துடனும், அழகுடனும் ஜொலித்தார். அவர்களைப் பற்றி 'பாகுபலி' காலத்திலிருந்தே காதல் வதந்தியும், திருமண வதந்தியும் வந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அனுஷ்கா அம்மா அந்த பொருத்தமான ஜோடி பற்றி அவரது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். “அனுஷ்கா, பிரபாஸ் இருவரும் படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். திரையில் அவர்கள் மிகவும் அழகான ஜோடி. பிரபாஸ் போன்ற ஒரு மருமகனை அடைய ஒவ்வொரு அம்மாவும் விரும்புவார்கள். ஆனால், அனுஷ்கா, பிரபாஸ் இருவரும் நண்பர்கள் மட்டுமே. அவர்களது திருமணம் பற்றிய வதந்திகளை மீடியாக்கள் தவிர்க்க வேண்டும்,” என்று கூறியிருக்கிறார்.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு 'பாகமதி' படத்தில் நடித்த அனுஷ்கா, அதன் பின் வேறு எந்த புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரபாஸ் 'சாஹோ' படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.