'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாலக்காட்டு தமிழ் பொண்ணு வித்யாபாலன். இப்போது இந்தியாவின் நம்பர் ஒன் நடிகை. வித்யா பாலன் சினிமா வாய்ப்பு தேடிய காலத்தில் தமிழ் சினிமாவில் நடிக்க ஆடிசன் வரைக்கும் வந்து நிராகரிக்கப்பட்டவர். மேலும் சில கசப்பான அனுபவங்களும் வித்யா பாலனுக்கு உண்டு. அதனால் தமிழ் படங்கள் என்றாலே அவருக்கு அலர்ஜியாக இருந்தது.
கமலுடன் தசாவதாரம், விஸ்வரூபம், ரஜினியுடன் கபாலி, காலா படங்களுக்கு பேசப்பட்டார். பெரும் தொகை சம்பளமாக கொடுக்க முன்வந்தபோதும் நடிக்க மறுத்து விட்டார். ஆனால் தற்போது தெலுங்கில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டாரும், முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமாவாக தயாராகிறது. இதில் என்.டி.ராமராவ் கேரக்டரில் அவரது மகன் என்.டி.பாலகிருஷ்ணா நடிக்கிறார். அவரது தாயாக அதாவது என்.டி.ராமராவின் மனைவி பசவதாரகம் அம்மாள் கேரக்டரில் நடிக்கிறார் வித்யா பாலன். இதில் நடிக்க அவருக்கு பெரும் தொகை சம்பளம் என்றபோதும் கதையும், கேரக்டரும் பிடித்திருந்தாலேயே நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
எந்த கேரக்டரில் நடித்தாலும் அதை நன்றாக உணர்ந்து நடிக்ககூடிய வித்யாபாலன், தற்போது பசுவதாரகம் அம்மாள் கேரக்டர் பற்றி மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து அவருடைய வீடியோக்களை பார்த்து தனது கேரக்டருக்கு பயிற்சி எடுத்து வருகிறாராம். இந்தப் படத்தில் வித்யா பாலன் நடிக்க ஒப்புக் கொண்டது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யத்துடன் பேசப்படுகிறது.