ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பழம்பெரும் நகைச்சுவை நடிகை குமாரி சச்சுவுக்கு நாடக சூடாமணி விருது வழங்கப்பட்டது. திரைப்படங்களிலும், நாடக உலகிலும் அவர் செய்த சேவையை பாராட்டி இந்த விருதினை சென்னையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணகான சபா அவருக்கு வழங்கியது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணயத் தலைவர் ஆர்.நடராஜ் விருதினை வழங்க, சச்சு நேரில் பெற்றுக் கொண்டார். தொழிலதிபர் நல்லி குப்புசாமி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சச்சுவை வாழ்த்தினார்.
விழாவில் தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர் அலாவுதின், ஏவி.எம்.சரவணன், வைஜெயந்திமாலா, ஏ.ஆர்.சீனிவாசன், சித்ராலயா கோபு, எஸ்.பி.முத்துராமன், இசையமைப்பாளர் தேவா, ஒளிப்பதிவாளர் பாபு, எஸ்.வி.ரமணன், இயக்குனர் சி.வி.ராஜேந்திரன், நடிகர் பாண்டு, பாடகி பி.சுசிலா, மூத்த நடிகைகள் ராஜசுலோசனா, காஞ்சனா, ராஜஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சச்சுவை வாழ்த்தினார்கள்.