‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. பாலிவுட் நடிகர்களில் நடனத்துக்கு புகழ்பெற்றவர். 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் வெளிவந்த யாகாவாராயினும் நாகாக்க என்ற படத்தில் வில்லனாக நடித்தார். இவரது மகன் மஹாஅக்ஷ்ய். இவரும் இந்தி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்து வருகிறார். வளர்ந்து வரும் நடிகரான மஹா மீது இளம் போஜ்புரி நடிகை பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
டில்லி தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் அவர், மஹா மீது நேரடியாக வழக்கு தொடர்ந்துள்ளார். கோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
என்னுடன் மஹா அக்ஷய் சில வருடங்களாக நெருங்கி பழகி வந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தோம். என்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார். பின்னர் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்தார். 4 வருடங்களாக என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். மருந்து கொடுத்து எனது கர்ப்பத்தை கலைத்து விட்டார். என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினேன். ஆனால் அவர் ஏற்கவில்லை.
மஹா அக்ஷய்யின் தாயார் யோகிதா பாலிக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அவர் என்மீது ஆத்திரப்பட்டார். மகனுடனான உறவை முறித்து விடும்படி மிரட்டினார். என்னை பாலியல் வன்கொடுமை செய்த மஹா அக்ஷய் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மஹா அக்ஷய் மற்றும் அவரது தாயார் யோகிதா பாலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




