மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
நடிகர் கமல்ஹாசன், டுவிட்டரில் கேள்விக்கு பதிலளிப்பதாக காலையில் தனது டுவிட்டரில் பதிவிட்டார். மாலையில் இதற்கான நிகழ்வு நடந்தது. வெறுமென பெயரளவில் தான் இந்த கேள்விகள் கேட்கப்பட்டன. "வணக்கம் டுவிட்டர்" தொடர்பாக நடந்த நிகழ்ச்சிக்கு தான் இந்த விளம்பரம்.
இந்த நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றார். தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மூலமாக கமலிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. டிடி கேட்ட கேள்விகள் பெரும்பாலும், அவர் ஏற்கனவே தயார் செய்து வந்த கேள்விகளாகத் தான் இருந்தன. கடைசியாக ஒன்றிரண்டு மட்டுமே ரசிகர்கள் கேள்விகளாக இருந்தன.
அந்தவகையில் கமலிடம் உங்களுக்கு எப்படி டுவிட்டர் ஆர்வம் ஏற்பட்டது என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கமல்,
மருது சகோதரர்களுக்கு சுவர் கிடைத்தது போன்று எனக்கு டுவிட்டர் கிடைத்தது. அவர்கள் அரசியலுக்கு சுவரை பயன்படுத்தினார்கள். நான் டுவிட்டரை பயன்படுத்துகிறேன். என்னுடைய நோட்டீஸ் போர்டாக டுவிட்டர் உள்ளது. பொதுபோக்குக்காக அல்ல. தனிப்பட்ட கோபம், மக்களுக்கு ஏற்படும் அநீதிகளை இதன் வாயிலாக பதிவு செய்கிறேன்.
மேலும் சிலர் அவமானம் செய்யும் விதத்தில் கேள்வி கேட்பார்கள். அவர்கள் எல்லாம் வெறுமென கேள்வி மட்டுமே கேட்பவர்கள். ஆகவே, அதை அப்படியே ஒதுக்கிவிட்டு போய்விடலாம். டுவிட்டரில் சுதந்திரமாக கருத்துக்களை பதிவு செய்யலாம், அதில் கொஞ்சம் பொறுப்பும் வேண்டும். அதை சிறப்பாக கையாள வேண்டும். என் அப்பா ஊழலுக்கு எதிரானவர். என்னையும் அப்படித்தான் வளர்த்தார். அதுபோல் என் கட்சியில் உள்ளவர்களும் அப்படித்தான் இருப்பார்கள்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.