மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
விஷாலின் சண்டக்கோழி-2 படத்தில் ஒரு அதிரடியான வில்லி வேடத்தில் நடித்துள்ள வரலட்சுமி, விஜய்யின் சர்கார் படத்திலும் ஒரு நெகடீவ் ரோலில்தான் நடித்து வருகிறார். அதோடு, அவர் வித்தியாசமான கெட்டப்பிலும் நடித்து வருவதால் அந்த வேடத்தை சஸ்பென்சாக வைத்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ்.
மேலும், இந்த படத்தில் நடித்தபோது விஜய் தன்னை மிகவும் கவர்ந்து விட்டதாக சொல்கிறார் வரலட்சுமி. அதாவது, அவரை நேரில் பார்த்தால் ரொம்ப சாப்ட்டாக இருக்கிறார். அதேசமயம் கேமரா முன்பு வரும்போது அவரது ஆவேசத்தைப்பார்க் கையில் வியப்பாக உள்ளது. இவ்வளவு அமைதியான மனிதருக்குள் இத்தனை ஆவேசம் எங்கிருந்து வந்தது என்கிற ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
அந்த அளவுக்கு அவர் நிஜத்தில் இருந்து சினிமாவில் புதுமாதிரியான இருக்கிறார் என்கிறார் வரலட்சுமி. மேலும், ஏற்கனவே விஜய்யுடன் நான்கு நாட்கள் நடித்துள்ள வரலட்சுமி, அடுத்து விஜய்யுடன் நடிக் கும் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக உள்ளது.