பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! |
கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள விஸ்வரூபம் 2, ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸாகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட டிரைலருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கமல் இயக்கி வந்த இன்னொரு படமான சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், கமலுக்கு விபத்து ஏற்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர் கமல், அரசியலில் பிஸியாகிவிட்டதால் இந்தப்படம் கிடப்பில் போனது.
தற்போது, பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் சபாஷ் நாயுடு படம் குறித்து கமல் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் 100 நாட்கள் பங்கேற்கிறேன். அது முடிந்ததும் சபாஷ்நாயுடு படப்பிடிப்பு தொடங்கும். ஏற்கனவே பாதி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்தியன் 2 முன்னதாக இந்தப்படம் முடிந்துவிடும். ஷங்கரும் 2.0 படத்தை முடித்து விடுவார் என கூறியுள்ளார்.