ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ராஜமவுலியின் பாகுபலி படத்தில் பிரபாஸ் - அனுஷ்கா இருவரும் இணைந்து நடித்தனர். அந்த படம் வெளியான நேரத்தில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. அதையடுத்து, அந்த செய்தியை மறுத்த அனுஷ்கா, பிரபாஸ் எனது நல்ல நண்பர் என்று கூறியிருந்தார்.
இருப்பினும், மீண்டும் சமீபத்தில் அவர்களைப்பற்றிய திருமண செய்தி வெளியாகின. இதற்கு பதிலளித்து பிரபாஸ் கூறியிருப்பதாவது... அனுஷ்காவுடன் தனது திருமணம் நடைபெறுவதாக கூறப்படுவது வதந்தி. அவர் எனது நண்பர் மட்டுமே. எனது சொந்த வாழ்க்கை பற்றி பேச விரும்பவில்லை. எனக்கு திருமணம் முடிவானால் நானே அனைவருக்கும் கண்டிப்பாக சொல்வேன் என கூறியுள்ளார்.