ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
எம்.ஜி.ஆர். நடித்த நல்ல நேரம் படம், ஹிந்தியில் வெளியான 'ஹாத்தி மேரா சாத்தி' படத்தின் ரீ-மேக்காகும். 1971-ல் வெளியான 'ஹாத்தி மேரா சாத்தி' பெயரில் தற்போது ஏறக்குறைய 47 வருடங்களுக்குப் பிறகு ஒரு படம் உருவாகிறது. இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்குகிறார்.
'ஹாத்தி மேரா சாத்தி' என்ற பெயரில் ஹிந்தியில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது. தெலுங்கு நடிகரான ராணா, விஷ்ணு விஷால் நடிக்க, கதாநாயகியாக கல்கி கண்மணி நடிக்கிறார்.
இந்த படத்தின் தமிழ்ப்பதிப்புக்கு 'காடன்' என்று பெயர் வைத்துள்ளனர். தெலுங்கு டப்பிங்குக்கு 'ஆரண்யா' என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
யானையை மையமாக வைத்து மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் யானையை வைத்து 'கும்கி-2' படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் பிரபு சாலமன்.
கும்கி சென்ட்டிமெண்ட் காரணமாக யானையை நம்ப ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது.