ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
2013ம் ஆண்டு வெளிவந்த அலைஸ் ஜானகி என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் அனிஷா அம்ரோஸ். அதன் பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்தார். சினிமாவுக்கு அறிமுகமாகி 5 ஆண்டுகளுக்கு பிறகு வஞ்சகர் உலகம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் மனோஜ் பீதா இயக்குகிறார். சிபி என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். சாந்தினி தமிழரசன், குரு சோம சுந்தரம் உள்பட பலர் நடிக்கிறார்கள். சரவணன் ராமசாமி மற்றும் ரோட்ரிகோ ஒளிப்பதிவு செய்கிறார்கள். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். லாரிபிரிந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரிக்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இது ஒரு கேங்ஸ்டர் கதை.