ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
22-ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாள். விஜய்யின் பிறந்த நாளை எப்போதுமே அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள். குறிப்பாக சென்னையில் சிறப்பாக இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த கொண்டாட்டங்கள் இல்லை.
இந்த ஆண்டு விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை கொண்டாட அவரது ரசிகர்கள் இப்போதே ஆயத்த வேலைளை தொடங்கிவிட்டனர். அதிலும் மதுரையிலுள்ள விஜய் ரசிகர்கள், ஜூன் 22-ந்தேதி, விஜய் எதிர்கால அரசியல் குறித்து மவுனம் கலைக்கிறார் என்று பத்திரிகை வடிவிலான போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இது பரபரப்பாகி உள்ளது.
ரஜினி, கமல் அரசியலில் பிரவேசித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யும் அரசியலில் பிரவேசிப்பாரா? இல்லை சூழ்நிலையை கருத்தில் கொண்டு தொடர்ந்து மவுனத்தையே பதிலாக கொடுப்பாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.