ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் ஒரு இசை அமைப்பாளர். தமிழ், மலையாளப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அவரது தாய் கரீமா பேகத்தின் கடும் உழைப்பாலும், ரஹ்மானின் இசை ஞானத்தாலும் அவரும் இசை அமைப்பாளர் ஆனார்.
அதன் பிறகு அவரது அக்கா ஏ.ஆர்.ரெஹைய்னா இசை அமைப்பாளர் ஆனார். தொடர்ந்து ரெஹைய்னாவின் மகன் ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் ஆனார். ரஹ்மானின் இன்னொரு தங்கையான இஷ்ரத் குதாரி இப்போது ஒரு படத்திற்கு இசை அமைத்து வருகிறார். இந்த வரிசையில் ரஹ்மான் குடும்பத்திலிருந்து அடுத்து வருகிறார் ஏ.ஹெச்.காசிப்.
இவர் ரகுமானின் தாய் வழி நெருங்கிய உறவினர். முறைப்படி இசை கற்றவர். கீ போர்ட் பிளேயராக பணியாற்றியவர். ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இது இந்தியில் வெளியான தும்ஹரி சுலு என்ற படத்தின் ரீமேக் ஆகும்.