மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
இந்தியத் திரையுலகத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 28ம் தேதி வெளிவந்து மிகப் பெரும் சாதனையைப் புரிந்த படம் 'பாகுபலி 2'. இதுவரை சுமார் 1700 கோடி வரை இந்தப் படம் வசூலித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக வசூலைப் பெற்ற முதல் படம்.
பல வெளிநாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றாலும் இந்தியாவில் வெளியான சில மாதங்களில் சீனாவில் வெளியாக முடியாத நிலை இருந்தது. சில வாரங்களுக்கு முன்புதான் சீனா சென்சாரை முடித்தார்கள். அதன்பின் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க இருந்தார்கள்.
இப்போது படத்தை மே 4ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்கள். சீனாவில் கடந்த வருடத்திலிருந்து வெளியான 'தங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார், பஜ்ரங்கி பைஜான்' ஆகிய படங்கள் பெரிய வசூலைக் குவித்தன. அந்த வரிசையில் 'பாகுபலி 2' படமும் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் 300 கோடி வசூலை அள்ளினால் கூட 2000 கோடி வசூலைத் தாண்டி தனிப் பெரும் சாதனை படைக்கும்.