ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. மும்பை பின்னணியில் உருவாகி உள்ள இப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் கரிகாலன் என்ற அடைமொழியுடன் தயாராகி வரும் காலா படத்தின் கதை என்னுடையது, அதை திருடி படமாக்கி உள்ளார்கள். கரிகாலன் என்ற பெயரில் ஏற்கனவே பட தலைப்பை பதிவு செய்துள்ளேன். எனவே காலா படத்தை தடை செய்ய வேண்டும் என சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார் ராஜசேகரன்.
இந்த வழக்கு காப்புரிமை சட்டத்தின் கீழ் வருவதால் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையிட செய்ய கோர்ட் அறிவுறுத்தியதுடன் அந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து, ராஜசேகரன் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதுதொடர்பாக இருதரப்பினரும் விளக்கம் அளித்திருந்தனர். தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் மற்றும் முகாந்திரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.